"உனக்கு என்னோட புருஷன் கேக்குதா?" கொதிக்கும் எண்ணெயை, ஊற்றி பெண்மசெய்த கொடூரம்!!
நாகை, மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவில் கார்த்தீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நடராஜர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது கணவனுக்கும், அவரது நண்பர் காளியப்பனின் மனைவி சுகன்யாவிற்கும் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வள்ளிக்கு இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வள்ளி, தனது கனவனையும் சுகன்யாவையும் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.
அதன் படி, கடந்த 2016ம் ஆண்டு காளியப்பனின் வீட்டிற்குச் சென்ற வள்ளி, சுகன்யாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் சுகன்யா தனக்கும் கார்த்தீசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற வள்ளி, கொதிக்கும் எண்ணெயை சுகன்யாவின் மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகன்யா நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இது குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகன்யாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுகன்யாவிடம் மரண வாக்குமூலம் பெற்றார். ஆனால் சுகன்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த வழக்கு நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது போக்சோ நீதிமன்ற நீதிபதி கார்த்திகா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன் படி, கொலை குற்றவாளி வள்ளிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.