ஆண்களே உஷார்!!! கொதிக்கும் தண்ணீரை கணவன் மீது ஊற்றிய மனைவி.. ஆண் நண்பர்களால் நேர்ந்த சோகம்..
ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர், சுரேஷ். கூலி வேலை செய்து வரும் இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அமராவதிக்கு ஆண் நண்பர்கள் உண்டு. இதனால் அவர், தனது நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால், தனது மனைவி மற்ற ஆண்களுடன் பேசுவது சுரேஷிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால் அமராவதி அதை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து மற்ற ஆண்களுடன் பேசியுள்ளார். இதனால் சமீப நாட்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அமராவதி தனது கணவன் மீது கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து, அவர் தனது கணவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
அந்த திட்டத்தின் படி, அவர் தனது கணவர் சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்த போது, தண்ணீரை கொதிக்க வைத்து அவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் உடலில் பலத்த காயங்கள் அடைந்த சுரேஷ், கதறி துடித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து.. இரண்டு பெண்கள் உடல் நசுங்கி பலி..!!