For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"என்னோட புருஷன மட்டும் எப்படியாது கொன்னுடு"; 20 சவரன் நகையை கொடுத்து, மனைவி போட்ட பிளான்..

woman-planned-to-kill-her-husband-for-her-lover
05:53 PM Dec 06, 2024 IST | Saranya
 என்னோட புருஷன மட்டும் எப்படியாது கொன்னுடு   20 சவரன் நகையை கொடுத்து  மனைவி போட்ட பிளான்
Advertisement

திருப்பூர், அவிநாசி தாமரை கார்டன் பகுதியை சேர்ந்தவர், ரமேஷ். இவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கோபாலகிருஷ்ணன், அஜித், சிம்போஸ், சரண், ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரமேஷை கொலை செய்ய, சையது இர்ஃபான் என்பவர் 8 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் அந்த பணத்தை ரமேஷின் மனைவி விஜயலட்சுமி கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

Advertisement

இதையடுத்து, சையது இர்ஃபானிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், சையது இர்ஃபானுக்கும் ரமேஷின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கணவர் ரமேஷை கொலை செய்ய, விஜயலட்சுமி தான் அணிந்திருந்த 20 சவரன் நகையை சையது இர்ஃபானிடம் கழற்றி கொடுத்துள்ளார். அந்த நகையை அவினாசியில் உள்ள இந்தியன் வங்கியில் சையது இர்ஃபான் அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து விஜயலட்சுமி, சையது இர்ஃபான் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த அரவிந்த் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஐவர் என எட்டு பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Read more: உடல் எடையை குறைக்க வேண்டும், ஆனால் ஓட்ஸ் சாப்பிட பிடிக்கவில்லையா? அப்போ இதை செஞ்சு பாருங்க..

Tags :
Advertisement