அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்ததால் மரணத்தின் விளிம்புக்கு சென்ற பெண்.. மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்...
காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் அதிகளவு தண்ணீர் குடித்த ஒரு பெண், மரணத்தின் விளம்புக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் காலை எழுந்த உடனேயே கிட்டத்தட்ட 4 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணுக்கு கடுமையான தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டது என்று அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "காலை எழுந்தவுடன் அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பதால் அந்த பெண்ணின் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் அகற்ற முடியும் என்று அவர் நம்பி உள்ளார்.
ஆனால அதிகளவில் தண்ணீர் குடித்த பிறகு அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதை தொடர்ந்து வலிப்பு மற்றும் சுயநினைவு இழப்பு ஏற்பட்டது. நீர் நச்சுத்தன்மையால் அவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ரத்தப் பரிசோதனையும் எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
தண்ணீர் நச்சுத்தன்மை என்றால் என்ன?
உங்கள் உடலில் அதிக நீர் தேவைப்படும்போது தண்ணீர் நச்சுத்தன்மை ஏற்படுகிறது என்று தண்ணீர் நச்சுத்தன்மை ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடலில் இருக்கும் அதிக தண்ணீரை வியர்வை அல்லது சிறுநீர் கழிப்பதன் மூலம் இயற்கையாக வெளியேற்ற முடியாத கடுமையான இரசாயன ஏற்றத்தாழ்வுகளுக்கு இந்த நிலை வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிக தண்ணீர் குடிப்பது உங்கள் ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்கிறது மற்றும் உங்கள் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை குறைக்கிறது, குறிப்பாக சோடியம் குறைய வழிவகுக்கிறது. இதன் விளைவாக, நீர் உங்கள் உடலின் செல்களுக்குள் நகர்ந்து அவற்றை வீங்கச் செய்கிறது.
எனவே, உங்கள் மூளை செல்களில் அதிக தண்ணீர் கிடைக்கும் போது, அது மூளையின் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் விழிப்புணர்வு, இயக்கம் மற்றும் நடத்தை ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த தண்ணீர் நச்சுத்தனமை ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
தண்ணீர் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் :
குமட்டல் மற்றும் வாந்தி
வயிற்றில் வீக்கம்
தலைவலி
தூக்கம்
தசை பலவீனம், வலி மற்றும் பிடிப்புகள்
குழப்பம், எரிச்சல் மற்றும் தலைச்சுற்றல் உட்பட உங்கள் மன நிலையில் மாற்றங்கள்
உங்கள் கைகள், கால்கள் மற்றும் வயிற்றில் கடுமையான வீக்கம் ஆகியவை
நீங்கள் அதிகமாக தண்ணீர் குடித்தீர்களா என்பதை தெரிந்து கொள்வது கடினமான விஷயம் தான். ஆனால் நீங்கள் சிறுநீர் கழிக்கும் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய கூறுகிறது. நீங்கள் போதிய நீர்ச்சத்துடன் இருந்தாலும், உங்கள் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும்.
உங்கள் சிறுநீர் நிறமற்றதாகவோ அல்லது தெளிவாகவோ இருந்தால் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். எனினும் உங்களுக்கு தண்ணீர் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் இருந்தால், தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எவ்வளவு தண்ணீர் அதிக நீரேற்றத்திற்கு வழிவகுக்கும்?
இது அதிகப்படியான நீரேற்றத்திற்கு வழிவகுக்கும் நீரின் அளவைப் பொறுத்தது. உங்கள் உடலில் எவ்வளவு அதிகமாக தண்ணீர் இருக்கிறது என்பதை அறிய உங்கள் உடல் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். சிறுநீர் கழிப்பதன் மூலம் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றலாம். ஒரு நாளில், இது சுமார் 1-2 லிட்டருக்கு சமம்.
ஒரு சிலருக்கு, சுமார் 3-4 லிட்டர் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் குடித்த பிறகு, தண்ணீர் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் உருவாகத் தொடங்குகின்றன.
அதிகப்படியான நீரேற்றத்தை எப்படி குறைப்பது?
தாகம் எடுக்கும் போது குடிப்பது
உங்கள் உடலின் அறிகுறிகளை கவனிப்பது
உங்கள் தாகத்தைத் தணித்த பிறகு தண்ணீர் குடிப்பதை நிறுத்துவது
உங்களுக்கு குமட்டல், வீக்கம் அல்லது தலைவலி இருந்தால் குடிப்பதை நிறுத்துவது.
Read More : அலர்ட்.. அடிக்கடி தலைவலி வருவதை ஈஸியா எடுத்துக்காதீங்க.. இந்த ஆபத்தான நோயின் அறிகுறியாக இருக்கலாம்..