"குழந்தையை விட, கள்ளக்காதலன் தான் முக்கியம்"; 2 வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு, தாய் செய்த காரியம்..
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் 28 வயதான நந்த கணேஷ். கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், மணப்பெண் வேண்டி பல்வேறு திருமணம் தகவல் மையங்களில் பணம் கட்டி பதிவு செய்துள்ளார். இந்நிலலையில், பேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் நேரில் பார்க்காமலே காதலித்து வந்த நிலையில், கடந்த 13ம் தேதி அந்த இளம்பெண் திடீரென நந்தகணேசை தேடி கருமத்தம்பட்டி வந்துள்ளார். அங்கிருந்து தனது காதலனுக்கு போன் செய்த இளம்பெண், நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய நந்தகணேஷ், இளம் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, அவரை தனது பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மறுநாள், அவரது பெற்றோர் தங்களது குலவழக்கப்படி கோயிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில், திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், உடுமலை டவுன் காவல் நிலைய போலீசார், உடுமலையில் இளம்பெண் மாயமானது தொடர்பான புகாரின்பேரில்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது.
செல்போன் சிக்னல் மூலம், அந்த இளம்பெண் கருமத்தம்பட்டியில் உள்ளதை தெரிந்து கொண்ட உடுமலை டவுன் போலீசார், கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று இளம்பெண்ணின் புகைப்படத்தை காண்பித்துள்ளனர். புகைப்படத்தை பார்த்தபோது, கடந்த 4 நாட்களுக்கு முன் புதுமணப்பெண் அலங்காரத்தில் தாலி கட்டிக்கொண்டு கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அந்த இளம்பெண் தான் என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, நந்தகணேஷ் வீட்டுக்கு சென்ற போலீசார் அந்த இளம்பெண்ணிடம் நைசாக பேசி காவல்நிலையம் அழைத்து வந்தனர். மேலும், அங்கிருந்த உடுமலை டவுன் போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அழைத்து சென்றனர்.
பேஸ்புக் காதலால் திருமணம் செய்து கொண்ட நந்தகணேஷ் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். குழந்தையை விட கள்ளக்காதலன் தான் முக்கியம் என்று இளம்பெண் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அதிக நேரம் கழிவறையில் இருப்பவரா நீங்கள்??? கட்டாயம் உங்களுக்கு இந்த பிரச்சனை வரும்..