கதறி துடித்த குழந்தை; ஆத்திரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்..
சேலம் மாநகர், குகை பகுதியில் 26 வயதான பசுபதி என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுனராக வேலை செய்து வரும் இவருக்கு 25 வயதான சண்முகப்பிரியா என்ற மனைவியும், வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், பசுபதியின் நண்பருக்கும் சண்முகப்பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில், சண்முகப்பிரியா தனது கணவரை விட்டுவிட்டு, 2 குழந்தைகளுடன் அவரது கள்ளக்காதலனிடம் சென்று விட்டார்.
அங்கு கள்ளக்காதலர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, சண்முகப்பிரியாவின் மூன்று வயது குழந்தை வெற்றிமாறன் தொடர்ந்து அழுதுள்ளான். இதனால் மது போதையில் இருந்த தமிழரசனுக்கு கோவம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழரசன் மற்றும் சண்முகப்பிரியா ஆகிய இருவரும் சேர்ந்து சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுவனின் உறவினர்கள் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், போலீசார் தமிழரசன் மற்றும் சண்முகப்பிரியா ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தமிழரசன் குழந்தையை தாக்கியது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த மூன்று வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உயிரிழந்தது. இதனால் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, குழந்தையின் தாயார் சண்முக பிரியாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர். மேலும், பசுபதியின் உறவினர்கள், முதல் குழந்தையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து ஆறு வயது சிறுவன் வெற்றிவேல் கூறுகையில், எனது அப்பா எனது தம்பியை அடித்தார் என மழலை வார்த்தையில் பேசியது அருகில் இருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது.
Read more: “நடிகர் சிவாஜி சொன்ன அந்த ஒரு வார்த்தை, இப்போ வர என்னால மறக்க முடியல” நடிகை லட்சுமி அளித்த தகவல்..