வீட்டில் இருந்து கேட்ட அலறல் சத்தம்; கள்ளக்காதலன் வீட்டில் கள்ளக்காதலி செய்த காரியம்..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான கணேசன். கூலித் தொழில் செய்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சோழவந்தான் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 45 வயது மனைவி பாண்டியம்மாள் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தீவிர விசாரணையில், கணேசனும் பாண்டியம்மாளும் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அதனை இருவரின் உறவினர்கள் கண்டித்தும் தெரியவந்துள்ளது. ஆனால் உறவினர்கள் கண்டித்த பிறகும் இருவரும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணேசன் வீட்டிற்கு சென்ற பாண்டியம்மாள் இந்த பிரச்சனை தொடர்பாக கணேசனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள், கத்தியால் கணேசனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் கணேசன் உயிரிழந்ததை அறிந்த பாண்டியம்மாள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் பாண்டியம்மாளை கைது செய்த சோழவந்தான் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read more: பெண்களே உஷார்!!! வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நடக்கும் மோசடி..