முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"புருஷன் இருந்தா, கள்ளக் காதலனுடன் சந்தோசமா இருக்க முடியாது" கள்ளக் காதலுக்காக மனைவி செய்த கொடூரம்..

woman killed her husband for her lover
09:02 AM Dec 20, 2024 IST | Saranya
Advertisement

விழுப்புரம், இந்திரா நகர் சாலையோரம் வீ.சித்தாமூர் கிராமத்தை சார்ந்த கொத்தனாரான மணிகண்டனின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் சடலத்தை மீட்டனர். அவரது சடலத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டனர். மணிகண்டன் அளவிற்கு அதிகமான மது அருந்தியதால் இறந்திப்பார் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால் மணிகண்டனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சயனைடு கலந்த மது அருந்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மணிகண்டனின் மனைவியிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

Advertisement

தீவிர விசாரணை மேற்கொண்டதில், மணிகண்டனின் மனைவி தமிழரசிக்கும், சென்னையை சேர்ந்த சங்கருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களின் உறவை மணிகண்டன் கண்டித்துள்ளார். மேலும், தனது மனைவியை சென்னையில் இருந்து தனது சொந்த கிராமமான வீ.சாத்தமூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் கொத்தனார் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தமிழரசி, மீண்டும் சங்கருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இது குறித்து மணிகண்டனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தமிழரசியும் சங்கரும் மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சங்கர் தனது நண்பரணான கார்த்திக்ராஜா மற்றும் சீனுவாசனுடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அந்த திட்டத்தின் மூலம், கட்டிட வேலை ஒன்று இருப்பதாக கார்த்திக் ராஜாவின் மனைவி சுவேதா, மணிகண்டனை இந்திரா நகருக்கு வரவழைத்துள்ளார்.

அதனை நம்பிய மணிகண்டனும் இந்திரா நகருக்கு சென்றுள்ளார். அங்கு வந்த மணிகண்டனுடன் கார்த்திக்ராஜாவும், சீனுவாசனும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மதுவில் சயனைடு கலந்து மணிகண்டனுக்கு குடிக்க கொடுத்துள்ளனர். மது போதையில் இருந்த மணிகண்டனும் அதனை குடித்துள்ளார். பின்னர், இந்திராக நகர் பகுதியில் தேசியநெடுஞ்சாலையான சர்வீஸ் சாலையோராம் மணிகண்டன் மயங்கி விழுந்தவுடன், அவர் இறந்ததை உறுதிபடுத்தி விட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து குற்றவாளிகளான இறந்த கொத்தனாரின் மனைவி தமிழரசி, கள்ளக்காதலன் சங்கர், சீனிவாசன், சுவேதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய சுவேதா கணவர் கார்த்திக் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Read more: ஆசிரியர் செய்யும் காரியமா இது? 3ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் செய்த காரியம்..

Tags :
husbandIllicit Relationshipmurderwife
Advertisement
Next Article