எம்பியை கட்டி அணைத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!
கேரளாவில் அரசியல்வாதியை கட்டிப்பிடித்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை மற்றும் தேவஸம் போர்டு துறை அமைச்சராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு காலனி என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தடை செய்ததற்காக பல்வேறு தரப்பு அவரை பாராட்டியுள்ளனர். அமைச்சர் ராதாகிருஷ்ணன் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இந்நிலையில், தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருபவர் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா எஸ் ஐயர். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவரது கணவர் சபரிநாதன் கேரள காங்கிரஸை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. திருவனந்தபுரம் சப் கலெக்டராக இருந்தபோது, அருவிக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சபரிநாதனை காதல் திருமணம் செய்து கொண்டார் திவ்யா. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராதகிருஷ்ணன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அன்று, ஐஏஎஸ் அதிகாரி திவ்யா, ராதாகிருஷ்ணனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் தீயாகப் பரவிய நிலையில், நான் கடந்த 20ஆம் தேதி ராதாகிருஷ்ணனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்ற போது அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்ட போது எடுத்த படம் இது. அப்போது என் கணவர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்" என ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா விளக்கம் அளித்துள்ளார்.