முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கேஜிஎஃப்-ல் பயங்கரம்.!அண்ணனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் கொடூர கொலை.! 2 நண்பர்கள் கைது.!

12:23 PM Dec 22, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கர்நாடக மாநிலத்தில் அண்ணனுடன் கள்ளத்தொடர்பிலிருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி. கணவரை இழந்த இவர் சலாபதி என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனை சலாபதியின் தம்பி முரளி கண்டித்து இருக்கிறார். ஆனாலும் சலாபதி மற்றும் தேஜஸ்வினி இருவரும் தங்கள் உறவைத் தொடர்ந்து இருக்கின்றனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த முரளி தனது நண்பரான ரஞ்சித் என்பவருடன் சேர்ந்து தேஜஸ்வினையை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் இன்று காலை தேஜஸ்வினி வீட்டிற்கு சென்ற முரளி மற்றும் ரஞ்சித் இருவரும் அவரை கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக வந்து இறந்த தேஜஸ்வினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளான முரளி மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். கள்ளத்தொடர்பால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேஜிஎஃப் பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Tags :
EMAindiaKarnatakakgfWoman Murdered
Advertisement
Next Article