மொத்தம் 4 கணவர்கள், 2 காதலர்கள்... மேட்ரிமோனியில் வளம் வந்த பெண்ணால், வாலிபருக்கு நேர்ந்த சோகம்..
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் 32 வயதான வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். திருமணம் ஆகாத இவர், மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அந்த மேட்ரிமோனி மூலம், இளம் பெண் ஒருவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில், அந்த இளம்பெண் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாலிபரிடம் கூறியுள்ளார். மேலும், இருவரும் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த பெண் தனது அக்காவுக்கு உடல் நலம் சரியில்லை சிகிச்சைக்கு பணம் வேண்டும் என கூறி, அந்த வாலிபரிடமிருந்து 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு தவணைகளாக வாங்கியுள்ளார்.
திடீரென கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், வாலிபரை ஏமாற்றியது சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்பது தெரியவந்துள்ளது. மேலும், பிரியாவின் முதல் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவரது இரண்டாவது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து விட்டார். அவர் அதோடு நிறுத்தாமல் மூன்றாவதாகவும் நான்காவதாகவும் அடுத்தடுத்து பிரியா திருமணம் செய்து கொண்டே இருந்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், ஈரோட்டை சேர்ந்த மற்றொரு வாலிபரிடமும் தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி, 4 லட்ச ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார். இதையடுத்து, பிரியா வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது..
Read more: மகளிடம் அத்துமீறிய கணவன்; தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…