பூனையை கொஞ்சிய கணவன்; விவாகரத்து கேட்ட மனைவி; நீதிபதியையே திணற வைத்த விசித்திர வழக்கு..
கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் தம்பதியின் குடும்பத்தில் நடந்த சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆம், மனைவி தனது கணவர் மீது, திடீரென வரதட்சனை புகார் அளித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த புகார் மனுவில், அவரது கணவர் தன்னைவிட அவரது வளர்ப்பு பூனை மீது அதிக அக்கறை காட்டுவதாகவும், அந்த பூனையிடமே அதிக நேரம் செலவிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, அவரது கணவர், ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவி தான் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாகவும், இதனால் போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த விசித்திரமான வழக்கை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார், அப்போது அவர் பேசும்போது, " அவர்கள் வீட்டில் உள்ள செல்லப் பிராணியான பூனையால் தான் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. அந்த பூனையை பற்றி, புகாரின் ஒவ்வொரு பாராவிலும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பூனை அந்த பெண்ணை பல முறை கீறியுள்ளது. பூனை கீறியதை எல்லாம் வரதட்சணை கொடுமையாக கருத முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டோர் மீது 498 A பிரிவின் கீழ் விசாரணை நடத்த முடியாது என்றார். மேலும், இதுபோன்ற வழக்குகளால் தான், மற்ற வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண் அளித்த குற்றச்சாட்டின் முக்கிய அம்சம் ஒரு வளர்ப்பு பூனை சம்பந்தமான சண்டையின் அடிப்படையில் உள்ளதால் இது சட்ட துஷ்பிரயோகமாகும் என்றார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டோர் மீது விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து, புகார் அளித்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
Read more: “நிர்வாணமா ரோட்டுல நின்னேன்” பிரபல நடிகர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்..