பால் கேட்டு அலறிய 1 1/2 வயது பிஞ்சு குழந்தை.! தந்தையின் செயலால் தாய் எடுத்து விபரீத முடிவு.!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பாலுக்காக குழந்தை அழுதபோது கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கார்வேபாவிபல்யா லட்சுமி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷாலினி மற்றும் சுரேஷ் தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று நள்ளிரவு குழந்தை பாலுக்காக அழுது இருக்கிறது. அப்போது ஷாலினியின் மாமியார் குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்டு இருக்கிறார். இதற்கு ஷாலினி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது ஷாலினியின் கணவர் சுரேஷ் குழந்தையை தூக்கிச் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி யாரும் எதிர்பாராத விதமாக வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு பால் கொடுக்கும் விவகாரத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.