For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளக்காதலை கண்டித்ததால் அக்கா மகனுக்கு சூனியம் வைத்த பெண்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!! கர்நாடகாவில் அதிர்ச்சி..!!

Bhimappa has been opposing Shobha's false accusations. Because of this, Shobha, in order to take revenge on Bhimappa, casts a spell and places him in front of his house.
07:59 AM Jan 11, 2025 IST | Chella
கள்ளக்காதலை கண்டித்ததால் அக்கா மகனுக்கு சூனியம் வைத்த பெண்     கடைசியில் நடந்த பயங்கரம்     கர்நாடகாவில் அதிர்ச்சி
Advertisement

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவில் உள்ள கோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபா. இவரது அக்கா மகன் பீமப்பா. இந்நிலையில், ஷோபாவுக்கு மாந்திரீகத்தில் தீவிர நம்பிக்கை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஷோபாவுக்கு ஒரு இளைஞனுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால், ஷோபாவை பீமப்பா கண்டித்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் நடைபெற்று வந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் ஷோபா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது ​​பீமப்பா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த பீமப்பா, ஷோபாவின் தலையில் கல்லால் அடித்தார். இதில், அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு விரைந்த போலீசார், ஷோபாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் போது, ​​ஷோபாவின் கள்ளக்காதலுக்கு பீமப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதன் காரணமாக, பீமப்பாவை பழிவாங்குவதற்காக ஷோபா சூனியம் செய்து அவரது வீட்டின் முன் வைத்துள்ளார். பீமப்பாவுக்கு எங்கும் வேலை கிடைக்காதபடி அவர் மீது அவதூறு பரப்பி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பீமப்பா, ஷோபாவைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பீமப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”மத்திய அரசு இதை மட்டும் செய்துவிட்டால் தங்கம் விலை மேலும் உயரும்”..!! ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement