For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டீ கொடுக்க லேட்டானது ஒரு குத்தமா.? தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பெண்.! கணவன் வெறி செயல்.!

02:35 PM Dec 20, 2023 IST | 1newsnationuser4
டீ கொடுக்க லேட்டானது ஒரு குத்தமா   தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பெண்   கணவன் வெறி செயல்
Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் டீ போடுவதற்கு தாமதமாகும் என்று கூறியதால் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவரது கணவர் தரம்வீர். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்யும் தரம்வீர் அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் உடையவர் என்று தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை எழுந்ததும் டீ வேண்டும் என்று மனைவி சுந்தரியிடம் கேட்டிருக்கிறார்.

அவரும் டீ தயார் செய்து கொண்டிருக்கிறேன் 10 நிமிடம் பொறுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தரம்வீர் வீட்டிலிருந்த வாள் எடுத்து தனது மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த குழந்தைகள் அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். டீக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement