Air attack: காஸாவின் அவலம்!… 31 ஆயிரம் முறை வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!… கொத்து கொத்தாக பலியான மக்கள்!
Air attack: காஸாவை கைப்பற்ற இதுவரை 31 ஆயிரம் முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்துவருகிறது. காசா பேரழிவை சந்தித்து வருகிறது. ஹமாஸ் அழிக்கப்படும்வரை போர் தொடரும் என்ற அறைகூவலுடன் இஸ்ரேல் வான்வழி, தரைவழி என கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காசா உருக்குலைந்துவிட்டது.
அதாவது, தாக்குதல் தொடங்கிய கடந்த அக்.7ம் தேதிமுதல் இன்றுவரை காஸா மறும் லெபனானில் 31 ஆயிரம் முறை வான்வழி தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலில் இதுவரை 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது. இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உலகநாடுகளிடையே எழுந்துள்ளது.
English summary: 31 thousand air strikes
Readmore:https://1newsnation.com/parents-polio-drop-camp-on-march-3rd-central-government-announcement/