For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Election 2024| "140 கோடி மக்களின் ஆசிர்வாதத்தோடு மீண்டும் பிரதமராவேன்"… தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் மோடி நம்பிக்கை.!

05:59 PM Mar 16, 2024 IST | Mohisha
election 2024   140 கோடி மக்களின் ஆசிர்வாதத்தோடு மீண்டும் பிரதமராவேன் … தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் மோடி நம்பிக்கை
Advertisement

Election 2024: பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகவே என மோடி(Modi) நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Election 2024: இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இதன்படி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மேலும் முதலாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஜூன் 4-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தேசத்தின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவிற்கு பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக இருப்பதாக பிரதமர் மோடி(MODI) தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி " 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது . பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி தேர்தலுக்கு முழு அளவில் தயாராக இருக்கிறது. நல்லாட்சி மற்றும் பொது மக்களுக்கான சேவை என்ற எங்களின் சாதனை அடிப்படையில் நாங்கள் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். 140 கோடி குடும்ப உறுப்பினர்கள் 97 கோடி வாக்காளர்கள் ஆதரவுடன் ஆசியுடனும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்" என தெரிவித்துள்ளார்.

10 வருடங்களுக்கு முன்னர் நாம் நாட்டின் ஆட்சி பொறுப்பேற்ற போது, ​​இந்தியக் கூட்டணியின் தவறான ஆளுகையால் நாடும் அதன் குடிமக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். மோசடிகள் மற்றும் கொள்கை முடக்கம் ஆகியவற்றால் தீண்டப்படாத எந்தத் துறையும் இல்லை. நாடு விரக்தியின் ஆழத்தில் இருந்தது, உலகமும் இந்தியாவை நம்புவதை நிறுத்திவிட்டது. அந்த நிலையில் இருந்து நாட்டை வெளியே கொண்டு வந்தோம், இன்று இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

140 கோடி நாட்டு மக்களின் சக்தி மற்றும் திறனுடன், நமது நாடு ஒவ்வொரு நாளும் வளர்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இன்று நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளோம், மேலும் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். நமது அரசின் திட்டங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைந்துள்ளன. 100 சதவீத நாட்டு மக்களை சென்றடைய நாம் உழைத்துள்ளோம், அதன் முடிவுகள் நம் முன் உள்ளன என தெரிவிக்கிறார்.

எனது நாட்டு மக்கள், குறிப்பாக ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் சக்தியின் ஆசீர்வாதத்தால் நான் பெரும் பலத்தைப் பெறுகிறேன். "நான் மோடியின் குடும்பம்" என்று என் நாட்டு மக்கள் கூறும்போது, ​​வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப கடினமாக உழைக்க அது என்னை ஊக்குவிக்கிறது. வளர்ந்த இந்தியாவுக்காக கூட்டு முயற்சிகளை மேற்கொள்வோம், இந்த இலக்கை அடைய இதுவே நேரம், இதுவே சரியான நேரம் என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

Read More: Actress Shruti | ’உறவினரால் பாலியல் தொல்லை’..!! ’தற்போது அவனுக்கு மகள் பிறந்திருப்பதால் இதுதான் தண்டனை’..!! நடிகை பகீர் பேட்டி..!!

Tags :
Advertisement