முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விப்ரோவின் புதிய CEO இவர்தான்.. பதவியை ராஜினாமா செய்த தியரி டெலாபோர்ட்!

11:15 AM Apr 07, 2024 IST | Mari Thangam
Advertisement

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ-வின் தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் திடீரென பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய அதிகாரியாக ஸ்ரீனிவாஸ் பல்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த நான்கு ஆண்டுகளாக விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தவர் தியரி டெலாபோர்ட். இவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய சிஇஓ ஆகவும், நிர்வாக இயக்குநராகவும் ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

தியரி டெலாபோர்ட் ராஜினாமாவைத் தொடர்ந்து உடனடியாக ஸ்ரீனிவாஸ் பாலியாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்த விப்ரோ நிர்வாகம், “கடந்த நான்கு ஆண்டுகளாக விப்ரோவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய தியரி, இந்த நிறுவனத்துக்கு வெளியே தனது கனவைத் தொடர இந்த பதவியிலிருந்து விலகுகிறார்” என தெரிவித்துள்ளது.

புதிய சிஇஓ நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விப்ரோ தலைவர் ரிஷத் பிரேம்ஜி, “இந்த முக்கிய தருணத்தில் விப்ரோவை வழிநடத்த ஸ்ரீனிவாஸ் ஒரு சிறந்த தலைமையாக இருப்பார். கடந்த நான்கு ஆண்டுகளில், விப்ரோ மிகவும் சவாலான சூழல்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஸ்ரீனிவாஸ் இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக இருந்துள்ளார் என தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பதவியேற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீனிவாஸ் பாலியா, “லாபத்தையும் நோக்கத்தையும் இணைக்கும் அரிய நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்றாகும். மேலும் புகழ்பெற்ற இந்த நிறுவனத்தை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக நியமிக்கப்பட்ட ஸ்ரீனிவாஸ் பல்யா, 1992 முதல் விப்ரோவில் இருந்து வருகிறார். விப்ரோவின் நுகர்வோர் வணிகப் பிரிவின் தலைவராகவும், வணிக பயன்பாட்டுச் சேவைகளின் உலகளாவிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Wiprowipro new CEO
Advertisement
Next Article