குளிர் காலத்தில் வெந்நீரில் தலைக்கு குளிக்கிறீங்களா..? உங்கள் முடிக்கு நீங்கள் தான் எதிரி.. மருத்துவர்கள் எச்சரிக்கை!!
குளிர்காலத்தில் சாதாரண நீரில் குளிப்பது என்பதே பெரும் சவால். எனவே பலரும் வெந்நீரில் குளிப்பார்கள். இது உடலுக்கும் சருமத்திற்கும் நல்லதா என்ற கேள்வி பலருக்கு இருக்கு.. சிகாகோ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான டாக்டர் விக்டோரியா பார்போசா, இதுகுறித்த பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
குளிப்பது என்பது தினசரி வேலை. குளிப்பதால், புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் நீங்கள் குளிப்பதற்கு என்ன வகை தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்? என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சுடுநீரில் குளிப்பது தளர்வான நரம்புகளைச் செயல்படுத்துவது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போன்ற நன்மைகளைக் கொண்டுள்ளது என்று டாக்டர் பார்போசா விளக்கினார், ஆனால் தினமும் வெந்நீரில் குளிப்பது உங்கள் சருமத்திற்கு நல்லதல்ல. இது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
1. விந்தணு எண்ணிக்கையில் பாதிப்பு : மிகவும் சூடான நீரில் குளிப்பது ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிகவும் சூடான தண்ணீரில் குளிப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் தரமும் குறைவதால் பாலின ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
2. முடி உதிர்தல் : உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போட்டு வெந்நீரில் குளித்தால், அது உங்கள் தலைமுடியை பலவீனமாகவும் சுருக்கமாகவும் மாற்றிவிடும். இதன் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினை தொடங்கலாம். அதே நேரத்தில், சூடான நீர் உங்கள் மயிர்க்கால்களை அதாவது முடி வேர்களை திறக்கிறது. இதன் காரணமாக முடி அதன் வேர்களில் இருந்து வெளியேறத் தொடங்குகிறது.
தலைக்கு வெந்நீரில் குளிப்பது உச்சந்தலையில் வறட்சியை ஏற்படுத்தும். இதன் விளைவாக, நீங்கள் அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். ஏனெனில், தலையின் தோல் மிகவும் வறண்டு போகும் போது, அதன் மேல் அடுக்கு அகற்றத் தொடங்குகிறது. இது பொடுகு பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது. தலை பொடுகு எண்ணெய் அல்லது அதன் ஊட்டச்சத்தை உச்சந்தலையில் அடைய அனுமதிக்காது.
3. தோல் வறட்சி மற்றும் அரிப்பு : வெந்நீரில் குளிப்பதால் தோல் வறட்சி மற்றும் தோலில் அரிப்பு போன்றவை ஏற்படலாம். ஏனெனில், வெந்நீர் அழுக்கு மற்றும் தூசியுடன் சருமத்தை பாதுகாக்கும் ஈரப்பதத்தையும் நீக்குகிறது. இதன் காரணமாக, தோல் வறண்டு போகத் தொடங்குகிறது. மேலும், இதனால் அரிப்பும் ஏற்படலாம்.
4. கண்களில் வறட்சி : வெந்நீர் சருமத்தின் ஈரப்பதத்தை மட்டுமின்றி கண்களின் ஈரப்பதத்தையும் பாதிக்கிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு, கண்களில் அரிப்பு பிரச்னை ஏற்படும். இது தவிர வெந்நீரில் குளித்தால் கண் சிவத்தல் பிரச்சனையும் வரலாம்.
5. முகப்பரு : குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்சனையும் அதிகரிக்கும். அதிகப்படியான வெந்நீர் முகப்பரு பிரச்சனைகளை அதிகரிக்கும். குளிர்காலத்தில் சூடான தண்ணீர் குளிக்க விரும்பும் அதே நேரத்தில், பக்க விளைவுகளை தவிர்க்க, நீங்கள் மிதமான சூடு உள்ள அல்லது வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதன் மூலம் மேலே கூறப்பட்டுள்ளது போன்ற உடல் நல பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
( துறப்பு : இந்த செய்தி தகவலுக்காக மட்டுமே.. உங்கள் உடல் நலம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன் மருத்துவரை அனுகவும் )
Read more ; ”தமிழ்நாட்டில் 2 கட்சிகளுக்குமே மக்களை பற்றிய அக்கறை இல்லை”..!! சென்னை ஐகோர்ட் காட்டம்..!!