முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வட்டி மட்டுமே இவ்வளவு கிடைக்குமா..? போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

Investors have to deposit the entire amount at once.
05:30 AM Jan 24, 2025 IST | Chella
Advertisement

மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஒரு சிறந்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல அல்லாமல் இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது. போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 7.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Advertisement

இத்திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது, ஒரு வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 6.9% வட்டி கிடைக்கும். 2 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.0% வட்டியும், 3 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.1% வட்டியும், 5 வருட டைம் டெபாசிட் முதலீட்டில் அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கப்படுகிறது. 7.50% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.

நீங்கள் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் விண்ணப்பிக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து முதலீடு செய்ய விரும்பும் தொகையையும் சேர்த்து கொடுங்கள். பின்னர், உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும்.

Read More : மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டிய கணவன்..!! எலும்பு, சதையை குக்கரில் போட்டு வேகவைத்த அதிர்ச்சி சம்பவம்..!!

Tags :
அஞ்சல் அலுவலகம்சேமிப்புத் திட்டம்போஸ்ட் ஆபீஸ் திட்டம்
Advertisement
Next Article