முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 உங்களுக்கு கிடைக்குமா..? கிடைக்காதா..? இதை படிச்சி தெரிஞ்சிக்கோங்க..!!

Let's see who will get the Pongal gift set this year.
01:22 PM Dec 24, 2024 IST | Chella
Advertisement

பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இலவச வேட்டி, சேலைகள், பச்சரிசி, கரும்பு மற்றும் ரூ.1,000 பணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

Advertisement

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்..?

குறிப்பாக, பொங்கல் பரிசு ரூ.1,000 ரொக்கத்தை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொருளில்லா அடைத்தாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இவர்களை தவிர்த்து மற்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 9ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் முன்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். எனவே, வரும் நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு கேடு..!! உயிருக்கு ஆப்பு வைக்கும் யூரிக் அமிலம்..? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!!

Tags :
பொங்கல் பண்டிகைரேஷன் அட்டைரேஷன் கார்டு
Advertisement
Next Article