முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | ’உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வீர்களா’..? மார்ச் 21ஆம் தேதி 5 மணி வரை டைம்..!! கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்..!!

11:39 AM Mar 18, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால், எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Advertisement

அதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது. உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வோம் என்ற போக்கை எஸ்பிஐ கடைப்பிடிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் எஸ்.பி.ஐ. வைத்திருக்கக் கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடனே தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More : BIG BREAKING | ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை..!! மக்களவை தேர்தலில் போட்டி..?

Advertisement
Next Article