For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’நாங்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவோமா’..? சுனிதா வில்லியம்ஸ் பரபரப்பு தகவல்..!!

Sunita Williams has expressed hope that she will return safely to Earth aboard Boeing's Starliner capsule from the International Space Station.
12:49 PM Jul 12, 2024 IST | Chella
’நாங்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவோமா’    சுனிதா வில்லியம்ஸ் பரபரப்பு தகவல்
Advertisement

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 5aஅம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு, ஜூன் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.

9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜூன் 22ஆம் தேதியே இருவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், விண்வெளியில் இருந்து தாங்கள் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதாவும், வில்மோரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் "எங்களை போயிங் விண்கலம் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும். இங்கு நாங்கள் சிக்கிக்கொண்டதாக நினைக்கவில்லை. சக விண்வெளி வீரர்களுக்கு உதவ, எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகவே இதை பார்க்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

Read More : ’இனி வரும் காலங்களில் நிலத்தடி நீரை குடிக்கவே முடியாது’..!! ’அப்படினா விவசாயம்’..? வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!!

Tags :
Advertisement