எதிர்காலத்தில் விசிக - தவெக கூட்டணி அமையுமா..? ஆதவ் அர்ஜூனாவை கை காட்டிய திருமா..!! - நச் பதில்
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு, அந்த நூலை வெளியிட்டிருந்தார். அந்த விழாவில், திருமாவளவன் முதலில் கலந்து கொள்வதாக இருந்து பிறகு திடீரென விலகினார்.. திமுகவின் அழுத்தம் காரணமாக திருமா கூட்டத்தில் பங்கேற்காமல் விலகியதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசினார். அதேபோல, "விடியல் நிச்சயம் உண்டு" என்ற விசிக தலைவர் திருமாவளவனின் எழுத்துக்களையும் சேர்த்து ஆதவ் அர்ஜுனா தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்த எழுத்துக்கள், பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனைத்தொடர்ந்து, அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்ப்புக் குரல்கள் வந்தது. அதன் பின்னர் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளன், விசிக-வின் கட்டுப்பாட்டை மீறி ஆதவ் அர்ஜூனா செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆதவ் அர்ஜூனா அடுத்து என்ன செய்ய போகிறார் என்று எனக்கு தெரியாது. அதை அவரிடம் கேளுங்கள் என்றார். எதிர்காலத்தில் விசிக தவெக கூட்டணி அமையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அது எனக்கு தெரியாது என பதில் அளித்துவிட்டு சென்றுவிட்டார்.
Read more ; கோவை முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!