ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்ட அறிவிப்பு..!!
வங்கிகளுக்கான குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும். 2023 பிப்ரவரி மாதம் முதலே ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றாமல் 6.5%ஆகவே இருந்து வருகிறது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை 2024-25ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.0%ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதே சமயம், இது 3 மற்றும் 4-வது காலாண்டில் 7.4% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 7.3%ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இருந்து வட்டி விகிதத்தில் நிவாரணம் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கிடையே, சில்லறை பணவீக்கம் இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. இது தவிர, மேற்கு ஆசிய நெருக்கடி மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. இது கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
Read More : ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் விலை எவ்வளவு..?