சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமா..? மீண்டும் ஏமாற்றிய மத்திய அரசு..!! அதிருப்தியில் மக்கள்..!!
ஜனவரி 1, 2025 முதல் தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டிலும், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்தவிதமான மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி - மார்ச் காலகட்டத்திற்கான வட்டி விகிதங்கள் முந்தைய காலாண்டில் இருந்ததைப் போலவே இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைக்கு 8.2% வட்டி தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க புத்தாண்டில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை மத்திய அரசு அறிவித்துள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதன்படி, 3 ஆண்டு கால வைப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1% ஆக இருக்கும் என்றும் பொது வருங்கால வைப்பு நிதி வைத்திருப்பவர்கள் 7.1% ஆக தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் உள்ளது. முந்தைய நிதியாண்டின் 4-வது காலாண்டில் அரசாங்கம் அதன் மிக சமீபத்திய மாற்றங்களைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
எந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி..?
சுகன்யா சம்ரித்தி யோஜனா - 8.2%
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் - 8.2%
தேசிய சேமிப்புச் சான்றிதழ் - 7.7%
கிசான் விகாஸ் பத்ரா (KVP) - 7.5%
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் - 7.4%
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) - 7.1%
தபால் அலுவலகம் தொடர் வைப்பு - 6.7%
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு - 4%
தபால் அலுவலக நேர வைப்பு (1 வருடம்) - 6.9%
தபால் அலுவலக நேர வைப்பு (2 ஆண்டுகள்) - 7%
அஞ்சல் அலுவலக நேர வைப்பு (3 ஆண்டுகள்) - 7.1%
அஞ்சல் அலுவலக நேர வைப்பு (5 ஆண்டுகள்) - 7.5%
Read More : ஜனவரி 1ஆம் தேதியான இன்று குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமா..? அப்படினா இப்படி வழிபடுங்க..!!