அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்வா..? வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. 60 வயது ஆனதும் அவர்கள் ஓய்வு பெறுவார்கள். உயர் பதவிகளுக்கு சில நேரங்களில் பதவி நீட்டிப்புகள் வழங்கப்படும். இது அவர் பணிசெய்யும் பதவியை பொருத்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
அதாவது, ஓய்வு வயது 60இல் இருந்து 62ஆக உயரப்போகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் பரவிய நிலையில், இந்த தகவலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கூறுகையில், ”அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60இல் இருந்து 62ஆக உயர்த்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. வயதை அதிகரிக்க எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வதாக வெளியாகும் தகவல் வதந்தியே. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளது.
Read More : ”தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம்”..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!