இதுகூட தெரியாமல் கட்சி தொடங்குவதா..? விளக்கம் அளித்தால் விஜய்க்கு ரூ.10 கோடி பரிசு..!! அறிவித்தது யார் தெரியுமா..?
“நாளைய வாக்காளர்கள் நீங்க. ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க. உங்க பெற்றோர் கிட்டயும் இத சொல்லுங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் எல்லாம் படிங்க” என மாணவர்கள் மத்தியில் பேசி அரசியலுக்கு அச்சாரம் போட்ட நடிகர் விஜய், நேற்று அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியையும் தொடங்கினார்.
தனது கொள்கை எது? தத்துவம் எது? தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் தனது நிலைபாடு என்ன? என்பதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும், அம்பேத்கர், பெரியார், காமராஜரை குறிப்பிட்டு, தான் எதை சார்ந்து அரசியல் செய்ய போகிறார் என்பதை உணர்த்தியுள்ளார். பிளவுவாத அரசியல் கலாசாரம், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் ஆகிய இரண்டுக்கு எதிராக அடிப்படை அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கட்சிக்கான அடித்தளத்தை போட்டுள்ளார் விஜய்.
இந்நிலையில், விஜய் கட்சி ஆரம்பித்த உடனே புதிய பிரச்சனை ஒன்று வெடித்துள்ளது. அவரது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிட்டுள்ளார். கழகம் என்றால் சூதாடும் இடம் என பொருள். இது கூட தெரியாமல் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விமர்சித்துள்ளார். கழகத்திற்கான சரியான விளக்கத்தை அவர் அளிக்க வேண்டும். எங்களுடன் விவாதித்து வெற்றி பெற்றால் அவருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என சவால் விடுத்துள்ளார்.