முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆஸ்கரை வெல்வாரா இந்திய விவசாயி?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

08:22 AM Jan 24, 2024 IST | 1newsnationuser3
Advertisement

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஜார்கண்ட் சிறுமியை பற்றிய ஆவணப்படம் ஆஸ்கர் போட்டியின் இறுதிகட்ட பரிந்துரை பட்டியலில் தேர்வாகியுள்ளது.

Advertisement

திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதற்காக 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவைகளில் இறுதுகட்ட பரிந்துரை பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்தியாவில் இருந்து மலையாள திரைப்படமான 2018 சிறந்த அயல்நாட்டு திரைப்பட பிரிவுக்கு தேர்வானது. ஆனால் தகுதி சுற்றுக்கு 15 படங்கள் மட்டுமே சென்ற நிலையில் 2018 படம் ஆஸ்கர் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் ஜார்கண்டைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவரது தந்தை நடத்திய சட்டப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான கன்னட ஆவணப்படமான டூ கில் ஏ டைகர் என்ற திரைப்படம் சிறந்த ஆவண படத்திற்கான பிரிவில் தேர்வாகியுள்ளது. இந்த ஆவணப்படம் தற்போது இறுதி சுற்று பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முன்னேறி இருக்கிறது.

டெல்லியில் பிறந்து, தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் நிஷா பஹுஜா என்கிற பெண் இந்த படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று மிகப்பெரிய கவனத்தையும் பெற்றுள்ளது. ஏற்கெனவே பல விருதுகளை வென்ற இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்று ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ஆவணப்படம்ஆஸ்கர் விருது 2024எதிர்பார்ப்பில் ரசிகர்கள்விவசாயிஜார்கண்ட் சிறுமி
Advertisement
Next Article