இப்படியுமா ஒருத்தர் சிக்கிவாரு..? மொபைல் செயலியால் வந்த வினை..!! அதிர்ந்துபோன ஓட்டல் நிர்வாகம்..!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி வந்துள்ளார். 36 வயதான இவருக்கு ரஷ்ய மொழி மட்டும் தான் தெரியும். இவர் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது இவருக்கு அந்த இடத்தின் மொழியான போர்ச்சுகீஸ் மொழி தெரியாததால் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தியுள்ளார்.
அந்த ஓட்டலில் மாதுளை பழச்சாறு ஆர்டர் செய்யவதற்காக அந்த மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தியபோது மாதுளை பழச்சாறுக்குப் பதிலாக, அதன் வார்த்தையான pomegranate-ஐ தவறாக மொழிபெயர்த்து வழங்க, இறுதியில் grenade (கையெறி குண்டு) என்று ஆர்டர் செய்துவிட்டார்.
அவர் ஆர்டர் செய்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த வெயிட்டர், கையெறி குண்டு வைத்து மிரட்டுவதாக நினைத்து போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டார். அதனால் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சுற்றுலாப் பயணியை கைது செய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
மேலும், அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர். ஆனால், அவர் தங்கியிருந்த அறையில் எந்த ஒரு ஆயுதமும் இல்லை. இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓட்டலில் சோதனை செய்வதற்கு முன்பே அங்கிருந்து வெளியே முயன்றதால் அவரை கைது செய்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.