For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திரும்ப பெறப்படும் ரூ.200 நோட்டுகள்.. சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா..? - RBI விளக்கம்

Will Rs. 200 notes be demonetized? Do you know what RBI said?
12:53 PM Jan 15, 2025 IST | Mari Thangam
திரும்ப பெறப்படும் ரூ 200 நோட்டுகள்   சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா      rbi விளக்கம்
Advertisement

2000 ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டது போல், 200 ரூபாய் நோட்டை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கப் போகிறதா? சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுபோன்ற செய்திகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. சந்தையில் இருந்து அனைத்து 200 ரூபாய் நோட்டுகளும் வாபஸ் என்ற செய்தி குறித்து ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

Advertisement

பெரிய ரூபாய் நோட்டுகளால் ஊழல் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது. வரலாற்றின் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ​​இது உண்மைதான் என்று நாமும் உணர்கிறோம். ஒரு காலத்தில் ரூ.10,000 நோட்டுகளும் இருந்தன. இதுபோன்ற நோட்டுகளால் ஊழல் அதிகரித்து வருவதை உணர்ந்த மத்திய அரசு, பெரிய நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்து ஊழலை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி முயற்சித்தது. அதன் ஒரு பகுதியாக 2,000, 1,000 மற்றும் 500 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

2016 நவம்பர் மாதம் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை மத்திய அரசு ரத்து செய்தது தெரிந்ததே. அப்போது அதற்கு பதிலாக 2000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி முதன்முறையாக மே 19, 2023 அன்று அறிவித்தது. இவற்றை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்கள் தங்களின் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொண்டனர். இதுவரை ரூ. 2000 நோட்டுகளில் 99 சதவீதம் திரும்பி வந்துள்ளது.

2000 நோட்டுகள் வாபஸ் பெற்ற பிறகு போலி 200 மற்றும் 500 நோட்டுகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், மக்களை கவனமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளது. மேலும் போலி நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என்பது குறித்தும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், 200 போலி நோட்டுகளும் சந்தைக்கு வந்துள்ளதால், அவற்றை ரத்து செய்ய, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், அசல் 200 நோட்டின் சிறப்பம்சங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரூ.200 நோட்டில் காந்தியின் உருவம், 'ஆர்பிஐ', 'பாரத்', 'இந்தியா', '200' மற்றும் அசோகரின் தூண் குறிகள் இருக்க வேண்டும், இவை எதுவும் இல்லை என்றால், அது போலி நோட்டு. இந்த பின்னணியில் 200 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகளை தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்கவும், நோட்டுகளை கவனமாக சரிபார்க்கவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Read more ; கேண்டீனில் டீ குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஐஐடி வளாகத்தில் குவிந்த போலீசார்..!! பரபரத்த சென்னை

Tags :
Advertisement