For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கழிவுநீர் கலந்த குடிநீரை அமைச்சரும், திமுகவினரும் குடிப்பார்களா..? பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு..!!

Annamalai has raised the question, 'Will the minister and DMK members come forward to drink the drinking water provided in the area?'
02:49 PM Dec 05, 2024 IST | Chella
கழிவுநீர் கலந்த குடிநீரை அமைச்சரும்  திமுகவினரும் குடிப்பார்களா    பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு
Advertisement

அமைச்சரும், திமுகவினரும் அப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, ”சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், 3 பேர் உயிரிழந்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டும்.

குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் திமிராகப் பதிலளித்துள்ளார். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் 55 ரூபாய்க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல். அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதல்வருக்கு உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி வலுப்படுகிறது.

Read More : “பார்த்துப் பேசு தம்பி”..!! “After all நீ ஒரு ஐபிஎஸ்”..!! “வா மோதிப் பார்ப்போம்”..!! வருண்குமார் எஸ்பி-ஐ தீண்டும் சீமான்..!!

Tags :
Advertisement