மீண்டுமா..? செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57-வது முறையாக நீட்டிப்பு..!! நீதிபதி அல்லி உத்தரவு..!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 57-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
செந்தில் பாலாஜியை வெளியே விட்டால், சாட்சியங்களை கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
Read More : பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தூக்கு..!! மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!