For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளச்சாராயத்தால் 60 உயிர்கள் பறிபோன பின்னரும் முதல்வராக தொடர்வதா..? அண்ணாமலை கண்டனம்..!!

A statewide demonstration will be held by the Tamil Nadu BJP on June 22 to condemn the inaction of the DMK government
12:34 PM Jun 20, 2024 IST | Chella
கள்ளச்சாராயத்தால் 60 உயிர்கள் பறிபோன பின்னரும் முதல்வராக தொடர்வதா    அண்ணாமலை கண்டனம்
Advertisement

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி 37 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்.

திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் 40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து ஜூன் 22ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read More : மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி..? குடித்தவுடன் மனித உடலில் என்ன நடக்கும்..? மருத்துவர் சொல்லும் விளக்கம்..!!

Tags :
Advertisement