வெண்டைக்காய் சாப்பிட்டால் இந்த பிரச்சனை சரியாகுமா..? ஆனால், இவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்..!! ஆபத்து..!!
வெண்டைக்காய் என்பது மனிதனுக்கு பல்வேறு வகைகளான நன்மைகளை செய்யக்கூடிய ஒரு காயாக இருந்து வருகிறது. அதோடு, இதில் பல்வேறு விட்டமின்கள் நிறைந்து இருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், உடலில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த வெண்டைக்காயை முற்றிலுமாக உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அதாவது ஒருவருக்கு அலர்ஜி எதிர்வினைகள் உடலில் காணப்பட்டால், அவர்கள் இந்த வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. அப்படி சேர்த்துக் கொண்டால் சரும பிரச்சனைகள் அல்லது இரைப்பை உடல் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரலாம்.
அதேபோல சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெண்டைக்காயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதோடு, ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனையை எதிர்கொண்ட நபர்களும் இந்த வெண்டைக்காயை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் ஆக்சலேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வெண்டைக்காயிலும் அந்த ஆக்சலேட் இருப்பதால் அவர்கள் இந்த வெண்டைக்காயை தவிர்ப்பது நல்லது.
அதேபோல சர்க்கரை நோய் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் இந்த வெண்டைக்காயை தவிர்ப்பது நல்லது. வெண்டைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது தான் என்றாலும் நீரிழிவு நோயாளிகள் இதனை அளவுடன் பயன்படுத்த வேண்டும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காயை சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து அதன் பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது.