2026இல் மீண்டும் திமுக ஆட்சியா..? பாஜகவை ஓரம்கட்டிய விஜய்..!! சீமான் செய்த தரமான சம்பவம்..!! புதிய சர்வே முடிவு..!!
2026ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது என்றும், அந்த தேர்தலில் அதிமுக 2வது இடம் பிடிக்கும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் பாஜகவை முந்தி 3வது பெரிய கட்சியாக மாறும் என ராஜநாயகம் டீம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம் கருத்து கணிப்பை நடத்தினார். இதில், திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக தலா ஒரு இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து ராஜநாயகம் விளக்கினார்.
அதாவது, கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் கடந்த 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 485 வாக்காளர்களிடம் நேரடி சந்திப்பு கருத்துகள் கேட்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் தொடர்பாகவும் மக்களிடம் அவர்கள் சில கேள்விகளை கேட்டுள்ளனர். அதாவது, 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பக்கூடிய கட்சி எது? யார் முதல்வராக வர வேண்டும்? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பதிலளித்துள்ளனர்.
அதன்படி மீண்டும் திமுக ஆட்சியமைக்க வேண்டும் என 31.8 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 21.5 சதவீதம் பேரும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 16.2 பேரும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15.2 சதவீதம் பேரும், பாஜகவுக்கு 10.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் முதல்வராக யார் வர வேண்டும்? என்ற கேள்விக்கு தற்போதைய முதல்வர் முக ஸ்டாலினுக்கு தான் அதிக ஆதரவு உள்ளது. முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என 30.7 சதவீதம் பேரும், எடப்பாடி பழனிசாமி என்று 21.7 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியின் சீமான் என்று 15.5 சதவீதம் பேரும், நடிகர் விஜய் என்று 14.5 சதவீதம் பேரும், அண்ணாமலை என்று 11.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பார்த்தால் கூட்டணி அமைக்காமல் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு அண்ணாமலை தலைவராக உள்ள பாஜக, நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றை விட அதிக ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : ‘பாஜகவுடன் கள்ள கூட்டணி’..!! ’அதிமுக ஆட்சியில் இருண்ட காலம்’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமர்சனம்..!!