ஐபிஎல் 2025 போட்டியில் களமிறங்குவாரா தோனி..? வரும் 31ஆம் தேதி வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..?
ஐபிஎல் 2025 தொடர் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, சிஎஸ்கே அணி அவரை தக்க வைக்குமா என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ”தோனி விளையாட வேண்டும் என்று ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஆசை இருக்கிறது. அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா? என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அவர் தான் இது குறித்து முடிவெடுத்து வைத்திருப்பார். வரும் 31ஆம் தேதி என்னவென்று தன்னுடைய முடிவைச் சொல்வதாக எங்களிடம் தெரிவித்து இருக்கிறார்” என்றார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் வரும் அக்டோபர் 29, 30ஆம் தேதிகளில் தோனியை சந்தித்து அணியில் விளையாடுவது தொடர்பாக பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி இன்னும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேனா விளையாடமாட்டேனா என்பது பற்றிய முடிவை இன்னும் எடுக்காமல் உள்ளதால், ஒரு வேலை அவர் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவருடைய முடிவு குறித்த விவரம் வரும் 31ஆம் தேதி தெரிய வரும். அதில், பார்த்து அவர் விளையாடுவாரா அல்லது ஓய்வுபெற முடிவெடுத்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
Read More : பெண்களே..!! இனி நீங்களும் நிலம் வாங்கலாம்..!! ரூ.5 லட்சம் மானியம்..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!