ஆந்திராவில் வெல்வாரா சந்திரபாபு நாயுடு ? - கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன!!
லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான எக்ஸிட் போல் சர்வேகளில் கூறப்பட்டுள்ளது.
18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதலாவது கட்ட தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசம், பீகார், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர்சிபி (யுவஜன ஸ்ராமிகா விவசாயி காங்கிரஸ் கட்சி), தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அத்துடன் ஆந்திரா மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில், 88 தொகுதிகளில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும்.
இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த எக்ஸிட் போல் முடிவுகளை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அதன்படி, ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் pepole's pulse கணித்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி 95 முதல் 110 தொகுதிகளை வெல்லும் என்றும் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கூட்டணி 45 முதல் 60 தொகுதிகளை பெறும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றனர்.
Read more ; BJP vs Congress | ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு..!!’ மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார்?