For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு மறுத்தது ஏன்..? இதுதான் காரணம்..!! ஸ்மிருதி இரானி விளக்கம்..

10:54 AM Dec 22, 2023 IST | 1newsnationuser6
மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கு மறுத்தது ஏன்    இதுதான் காரணம்     ஸ்மிருதி இரானி விளக்கம்
Advertisement

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 13ஆம் தேதி, எம்பி-யான மனோஜ் குமார் ஜா, பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார். அந்த பதிவில், "மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல. இதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தேவையில்லை" என கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெண்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்மிருதி இரானியின் பதிலுக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில், ஸ்மிருதி இரானி, எதனால் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை தேவையில்லை என கூறியதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது, எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து பேசினேன். ஏனென்றால், பணியிடத்தில் பெண்கள் பாகுபாட்டையும், துன்புறுத்தலையும் எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. ஆனால், இதற்கான கேள்வியானது அதிர்ச்சியை தூண்டும் வகையிலும், கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகவும் கொண்டிருந்தது” என்றார்.

Tags :
Advertisement