பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிய வேண்டும்? அணிந்தால் என்ன நன்மை…!
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே காலில் கொலுசு அணியாத ஆளே கிடையாது. அத்தகைய கொலுசு அணிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.
அந்த காலத்தில் பெரியவர்கள் எதை செய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் உண்டு. அதற்க்கு பின்னால் அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளது. நம் நாட்டில் இந்திய கலாச்சாரத்தின் படி காலில் வெள்ளி கொலுசு அணிவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளி கொலுசு அணிவது பாதங்களை அழகாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஆன்மீக ரீதியில், பெண்கள் தங்கள் காலில் வெள்ளி கொலுசு அணிந்தால், அந்த வீடு நேர்மறை ஆற்றலால் நிரப்பப்படும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இது அழகு பாரம்பரியம் மட்டுமல்லாமல் இதனால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
இந்த கால ஒழுங்கற்ற உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை, நீர்க்கட்டி, குழந்தை இன்மை போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் இதுபோன்ற பல பிரச்சனைகளில் இருந்து எளிதாக நிவாரணம் பெறலாம்.
வெள்ளிகொலுசு அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:
எலும்புகளுக்கு பலம்: உண்மையில், வெள்ளி கொலுசு அணிவதால் எலும்புகள் வலுவடையும். கணுக்கால் பாதத்துடன் தொடர்பு கொள்ளும்போது இந்த உலோக உறுப்பு தோலில் தேய்கிறது. பின் உடலில் நுழைந்து எலும்புகளை பலப்படுத்துகிறது.
உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது: காலில் கொலுசு அணிவதன் மூலம் உடலில் இருக்கும் உஷ்ணத்தை குறைக்கிறது. அறிவியல் நிபுணர்களின் கூற்றுப்படி,கொலுசு அணிவது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது.
கால் வலியிலிருந்து நிவாரணம்: காலை எழுந்தது முதல் இரவு வரை நிற்காமல் வேலை பார்ப்பதால் கால் வலியால் அவதிப்படுகிறோம். ஆனால் கொலுசு அணிவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: வெள்ளி கொலுசு காலில் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். வெள்ளி கொலுசு அணிவது உடலில் பாதங்களில் இருந்து வெளிப்படும் உடல் மின் சக்தியைச் சேமிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
ஹார்மோன் சமநிலை: வெள்ளி கொலுசு அணிவது பெண்களின் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மாதவிடாய் தொடர்பான பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய், சினைப்பை நீர்க்கட்டி, கருப்பை பிரச்சனைகள், குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.