முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ED மீது DVAC வழக்கு... நாங்கள் ஏன் ஆஜராக வேண்டும்...? 3-வது சம்மனுக்கு ED கொடுத்த அதிர்ச்சி பதில்...!

06:51 AM Dec 28, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தமிழக போலீஸ் அனுப்பிய சம்மனில் யார் ஆஜராக வேண்டும் என்ற தகவல் இல்லை, முத்திரை கூட இடம்பெறவில்லை. நாங்கள் ஏன் ஆஜராக வேண்டும் என எங்களுக்கு புரியவில்லை; யார் வரவேண்டும்? எதற்காக ஆஜராகவேண்டும் என்பதை தெளிவுபடுத்தினால் ஆஜராக தயார் - தமிழக காவல்துறை அனுப்பிய 3வது சம்மனுக்கு ED பதில் கடிதம் எழுதியுள்ளது.

Advertisement

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சுரேஷ்பாபு சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சட்டவிரோத செயல் என்றும், சோதனை என்ற பெயரில் அடையாளம் தெரியாத ஏராளமான பேர் புகுந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடி சென்று விட்டனர் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பு புகார் மனு அனுப்பப்பட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகுமாறு மூன்றாவது முறையாக மீண்டும் காவல்துறை சம்மன் அனுப்பியது. தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அதிக ஊழல் வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான விசாரணை நடத்த விடாமல் தடுக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அமலாக்க இயக்குனரகம் குற்றம்சாட்டி உள்ளது.

மதுரை துணை மண்டல அலுவலர், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு, மதுரை போலீசார் வழங்கிய நோட்டீசுக்கு பதிலளித்த ED அதிகாரி குப்தா , டிசம்பர் 26, 2023 அன்று கொடுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு நோட்டீஸ் பெறப்பட்டதாகவும், தமிழக போலீஸ் அனுப்பிய சம்மனில் யார் ஆஜராக வேண்டும் என்ற தகவல் இல்லை, முத்திரை கூட இடம்பெறவில்லை. நாங்கள் ஏன் ஆஜராக வேண்டும் என எங்களுக்கு புரியவில்லை. யார் வர வேண்டும்? எதற்காக ஆஜராகவேண்டும் என்பதை தெளிவுபடுத்தினால் ஆஜராக தயார் என தமிழக காவல்துறை அனுப்பிய 3வது சம்மனுக்கு ED பதில் கடிதம் எழுதியுள்ளது.

மதுரை காவல்துறைக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்த அவர், விசாரணையின் விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், காவல்துறைக்கு உதவ சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்க அமலாக்கத்துறை தயாராக இருப்பதாக கூறினார்.

Advertisement
Next Article