முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குழந்தைகளுக்கு ஏன் தினமும் 1 முட்டை கொடுக்க வேண்டும்..? பெற்றோர்களே கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

Do you know why children should be given 1 egg every day?
12:47 PM Dec 04, 2024 IST | Rupa
Advertisement

குழந்தைகளின் வளரும் பருவத்தில் ​​அவர்கள் எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது என்பது பெற்றோருக்கு எளிதான விஷயம். குழந்தைகளை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைப்பது அதை விட சவாலான விஷயம். முட்டையில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் குழந்தைகளுக்கு ஏன் தினமும் 1 முட்டை கொடுக்க வேண்டும்.? என்று உங்களுக்கு தெரியுமா?

Advertisement

குழந்தைகளுக்கு தினமும் 1 முட்டை கொடுப்பதால், அது அவர்களின் IQ அளவை 15 புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனr. முட்டையில் அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற நோயை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

நியூட்ரிஷனல் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, முட்டைகள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது..

முட்டையில் உள்ள சத்துக்கள்

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு 75-76 கலோரிகள், 7-8 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பை வழங்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் தசைகளை உருவாக்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் செல்கள் மற்றும் திசுக்களின் மீளுருவாக்கம் செய்யவும் முட்டை உதவுகிறது.

ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் இருப்பதால், இது குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளலில் பாதியையும், வயதான குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவில் மூன்றில் ஒரு பகுதியையும் பூர்த்தி செய்வதற்கான சரியான தேர்வாக அமைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முட்டையில் NWT-03 ஹைட்ரோலைசேட் என்ற கலவை உள்ளது. இது அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும் என்றும் படைப்பாற்றல், கவனத்தை ஈர்க்கும் திறன், பகுத்தறிவு, தடுப்பு கட்டுப்பாடு மற்றும் மன நெகிழ்வுத்தன்மை போன்ற மூளை செயல்பாடுகளை மேம்படுத்துகிறது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க சரியான நேரம் எது?

குழந்தைகளுக்கு 1 வயது ஆன உடனேயே நன்கு சமைத்த முழு முட்டையை கொடுக்க தொடங்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சிறுவயதிலேயே முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், குழந்தைகள் முட்டைகளை சகித்துக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள உதவுவதுடன், ஒவ்வாமை அபாயத்தைக் குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரம் குழந்தைகளுக்கு முட்டைகளை தாமதமாக அறிமுகப்படுத்துவது உணவு ஒவ்வாமையை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். முதலில் சிறிய அளவுகளில் ஆரம்பித்து, படிப்படியாக அளவை அதிகரிக்கலாம். முட்டையை மற்ற உணவுகளுடன் சேர்த்துக் கொடுப்பது நல்லது.

முட்டையில்13 வெவ்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. அதில் உள்ள கோலின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஊட்டச்சத்து ஆகும். மேலும் முட்டையில் அயோடின், இரும்பு, தரமான புரதம், ஒமேகா-3 கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் பி12 ஆகியவையும் நிறைந்துள்ளன.

காலை உணவில் முட்டைகளை சேர்த்து கொடுக்கும் போது, அது​​ குழந்தையின் மனநிறைவை அதிகரிப்பதுடன், பசியைக் குறைக்கும். உங்கள் குழந்தைக்கு 1 வயது ஆன பிறகு, நன்கு சமைத்த முழு முட்டையை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், ஆரம்ப கட்டத்தில் உப்பு அல்லது பிற மசாலாப் பொருட்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். வயதான குழந்தைகளுக்கு, ஆம்லெட், ஸ்க்ராம்பிள் எக், அல்லது வேகவைத்த முட்டைகள் சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Read More : சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கொட்டி கிடக்கும் நன்மைகள்.. ஆனால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

Tags :
Benefitsbenefits of eating eggsbenefits of eating eggs dailybenefits of eggbenefits of eggsboiled egg benefitsboiled eggs benefitsbolied egg benefitschicken eggs benefits and harmsEgg
Advertisement
Next Article