இப்படி ஒரு விஷயம் இருக்கா.? ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி ஏன் நடக்கிறது தெரியுமா.?
உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போது கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து மடாதிபதிகள் சாமியார்கள் யோகிகள் மற்றும் பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2019 ஆம் வருடம் பாபர் மசூதியின் பெரும்பான்மையான இடம் ராமஜென்ம பூமி இடம் ஒப்படைக்கப்பட்டு கோவில் கட்டும் பணிகள் தொடங்கியது. ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக மூன்று அடுக்குகளுடன் ராமர் கோயில் பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற 22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.
இந்த விழா மிகக் கோலாகலமாக அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்த விழாவானது ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் 12 20 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த நேரம் அபிஜித் முகூர்த்தத்தின் அடிப்படையில் இந்து பஞ்சாங்கங்களின்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்து சாஸ்திரங்கள் மற்றும் பஞ்சாங்கங்களின் அடிப்படையில் ராமர் பிறந்த நாள் மற்றும் நேரமாக இது கணக்கிடப்பட்டுள்ளதால் இந்த தேதியிலும் இந்த நேரத்திலும் கோவில் திறக்க இருப்பதாக ராமஜென்ம பூமியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.