For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜனாதிபதி தேர்தல் எப்போதும் நவம்பர் மாதம் செவ்வாய்கிழமை நடத்தப்படுவது ஏன்?

Why presidential elections are always held on a Tuesday in the month of November
10:10 AM Nov 05, 2024 IST | Mari Thangam
ஜனாதிபதி தேர்தல் எப்போதும் நவம்பர் மாதம் செவ்வாய்கிழமை நடத்தப்படுவது ஏன்
Advertisement

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வேட்பாளராக ஜனநாய கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும், குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பு மிக்க அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை மட்டுமே நடைபெறுகிறது.

Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலை நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமையாக நிர்ணயிக்க பல காரணங்கள் இருந்தன. 1840-களில், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால் பழைய முறை சரியாக இருந்தது. ஆனால் போக்குவரத்து வசதிகள், ரயில்வே, தந்தி போன்ற வசதிகள் மேம்பட, பொதுமக்களின் கருத்துக்கள் மாற்றியமைத்து தேர்தல் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தால் அமெரிக்கா தேர்தல் தேதி ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.

நவம்பர் மாதம் அறுவடை முடிந்திருக்கும் காலம் என்பதால் விவசாயிகள் வாக்களிக்க வசதியாக இருக்கும் என கருதப்பட்டது. மேலும், மேலும், அந்நாட்களில் மிகுந்த வெப்பம் அல்லது குளிர் இருப்பதில்லை என்பதால் பருவநிலை வாக்களிப்பதற்குச் சாதகமாக இருக்கும். முதலில், வார இறுதி நாட்களில் வாக்களிப்பது குறித்து யோசிக்கப்பட்டது, ஆனால், ஞாயிறு காலை தேவாலயம் செல்வது மற்றும் திங்கட்கிழமை பயணம் போன்ற காரணங்களால் செவ்வாய்க் கிழமையைத் தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு : தற்போது, செவ்வாய் கிழமையில் தேர்தல் நடத்துவதற்கான மரபுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வேலை நாட்களில் வாக்களிப்பதால், குறிப்பாக இளைய வாக்காளர்கள் தங்கள் வேலைப்பளுவில் இருந்து விடுபட்டு வாக்களிக்கச் சிரமப்படுகிறார்கள் என்று பலர் குற்றம் சொல்கின்றனர். இது, தேர்தல்களில் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பங்கேற்கும் வகையில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டிய நிலையைப் பற்றிய விவாதங்களை சமூக ஊடகங்களில் உருவாக்கியுள்ளது. மேலும் சமுதாய மாற்றங்களைப் பிரதிபலிக்கும் இந்த விவாதம், அனைவருக்கும் சமமான தேர்தல் முறையை உருவாக்கும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது.

Read more ; அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? விவாதத்தை தூண்டிய நீர்யானை கணிப்பு..!!

Tags :
Advertisement