கர்ப்பிணி பெண்கள் பச்சை முட்டையை கண்டிப்பாக குடிக்க கூடாது.! ஏன் தெரியுமா.?
புரதச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகமுள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடலுக்கு நன்மை ஏற்படுத்தும் என்று பலர் கூறி வருகின்றனர். நம் முன்னோர்கள் வயது வந்த பெண்களுக்கு பச்சை முட்டையை தினமும் குடிக்க கொடுத்து வந்தனர். இதனால் எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை பலப்படும் என்று கருதி வருகின்றனர்.
முட்டையில் புரோட்டின், கால்சியம், குளோரின், மெக்னீசியம், பொட்டாசியம், சல்பர், ஜிங்க் போன்ற பல வகையான மினரல்கள் உள்ளன. இவ்வாறு பல சத்துக்கள் நிறைந்த முட்டையை பச்சையாக இளம் வயது பெண்கள், பூப்படைந்த பெண்கள், தடைகள வீரர்கள், உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் போன்றவர்கள் குடிக்கலாம்.
ஒரு சில முட்டையில் சால்மோனல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இதை 74 டிகிரி வெப்ப நிலையில் சமைத்து சாப்பிடும் போது மட்டுமே அழிந்து போகும். பச்சையாக குடிக்கும்போது கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்த பாக்டீரியா உடலை தாக்கும் அபாயம் ஏற்பட்டு நோய்களை உருவாக்கும். இதனால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பச்சை முட்டை கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.