முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தேசிய கீதம் ஏன் போடல..? நான் படிக்க மாட்டேன்..!! சட்டப்பேரவையில் கடுப்பான ஆளுநர்..!! நடந்தது என்ன..?

11:09 AM Feb 12, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கடந்தாண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநருக்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை தரப்பட்டது. தனது உரையை தமிழில் தொடங்கினார் ஆளுநர். சில நிமிடங்களிலேயே நன்றி வணக்கம் கூறி உரையை நிறைவு செய்து விட்டு அமர்ந்தார். கடந்த ஆண்டு தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்ணா போன்ற சில வார்த்தைகளை மட்டுமே வாசிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர்.

இந்தாண்டு சட்டப்பேரவையில், "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளை வாசித்தார். வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரம் என்று மட்டும் கூறி உரையை முற்றிலும் புறக்கணித்தார். அதற்கான காரணமாக சட்டசபையில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக ஆளுநர் கூறினார். அதனுடன் உரையை முழுவதுமாக வாசிப்பதில் தார்மீக அடிப்படையில் தனக்கு முழு உடன்பாடு இல்லை என்றும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் நீண்ட கால் மரபை ஆளுநர் ஆர். என்.ரவி மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார். அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வருகின்றன. இதுவே இன்று சட்டசபையில் இந்த களேபரங்கள் நடக்க காரணம் ஆகும்.

Tags :
ஆளுநர் ஆர்.என்.ரவிசட்டப்பேரவைதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article