இதுக்கு எதுக்கு ஜெயில்!… சிறையில் கெஜ்ரிவாலுக்கு எத்தனை சலுகைகள் தெரியுமா?
Delhi: கடந்த 21ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாத நிலையில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் அவரின் காவல் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
அந்த காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் “கெஜ்ரிவாலின் ED காவலை நீட்டிக்கத் தேவையில்லை” என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.15 வரை நீதிமன்றக்காவலில் திகார் ஜெயிலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திஹார் சிறையில், அறை எண் இரண்டில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு, வீட்டு சாப்பாடு, சாக்லேட், மிட்டாய்கள் ஆகியவற்றை வழங்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதாவது, வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, சாக்லேட் மிட்டாய்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல், பாட்டில் குடிநீர், தலையணை உள்ளிட்டவை வழங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்தித்துப் பேசவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறையில், அறைக்குள்ளே 20 சானல்கள் தெரியும் வகையிலான தொலைக்காட்சி பெட்டியை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரவிந்த் கெஜ்ரிவால், தனது வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால் அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது போக, பகவத் கீதா, ராமாயணம் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ் ஆகிய நூல்களையும் தன்னுடன் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை அமர்ந்து வாசிக்க மேஜை நாற்காலி வைத்துக் கொள்ளவும் அரவிந்த் கெரிவால் அனுமதி கேட்டுள்ளார்.
Readmore: விமான பயணிகளுக்கு புதிய வசதி!… இனி காத்திருக்க தேவையில்லை!… வழிகாட்டுதல்கள் இதோ!