கேஸ் சிலிண்டர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது? காரணத்தை கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க!!
நாம் வீட்டில் பயன்படுத்துகின்ற கேஸ் சிலிண்டர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று நாம் எப்போதாவாது யோசித்தது உண்டா?
நம்முடைய வாழ்க்கையில் தினம் தினம் எண்ணற்ற விஷயங்களை பார்க்கிறோம். ஆனால், அவைகள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதை ஒருநாளும் யோசித்து இருக்கமாட்டோம். அதுபோலதான் கேஸ் சிலிண்டரும். அவற்றின் நிறத்திற்கு பின்னால் மிகப்பெரிய விஷயம் இருக்கிறது.பொதுவாக சிவப்பு என்பது ஆபத்தைக் குறிக்கும். ஆபத்து உள்ள இடங்களில் சிவப்பு துணி அல்லது பலகை பயன்படுத்தப்படுகிறது. இதைப் பார்க்கும் போது இங்கு ஆபத்து உள்ளது. எனவே கவனமாக இருப்பது நல்லது என்று அர்த்தம்.
நாம் பன்படுத்துகின்றனகேஸ் சிலிண்டரும் ஆபத்தான ஒன்றுதான். ஏனெனில் அதில் எரியக்கூடிய வாயு இருக்கிறது. அங்கும் இங்கும் சிறிதளவு கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் சிவப்பு நிறம் கேஸ் சிலிண்டருக்கு குறிகாட்டியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், சிவப்பு நிறம் எந்த தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதனால்தான் அவற்றின் உரிமையாளர்கள் கேஸ் சிலிண்டர்களுக்கு சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் விறகு அடுப்பு இருந்தது. ஆனால் இப்போது Zis சிலிண்டர் வந்த பிறகு அவை அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. மற்றபடி கேஸ் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது நல்லது. மேலும் சிவப்பு நிறத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டவே வணிக பயன்பாடு சிலிண்டருக்கு நீலநிறம் கொடுக்கப்படுகிறது.
Read More: வயிறு நிறைய சாப்பிட்டாலும் உங்களுக்கு இந்த மாதிரி இருக்கா..? ஆபத்து..!! என்ன செய்ய வேண்டும்..?