For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'கிழக்கு ஆசியா பகுதியில் போர் பதற்றம்' தைவான் மீது சீனா திடீர் ராணுவ ஒத்திகை நடத்துவது ஏன்?

12:45 PM May 24, 2024 IST | Mari Thangam
 கிழக்கு ஆசியா பகுதியில் போர் பதற்றம்  தைவான் மீது சீனா திடீர் ராணுவ ஒத்திகை நடத்துவது ஏன்
Advertisement

தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்நாடு உரிமை கோரி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி வளைத்திருக்கிறது. 49 போர் விமானங்கள், 19 போர் கப்பல்கள் தைவானை சுற்றி சீனா நிற்க வைத்திருக்கிறது.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அமெரிக்கா தைவானுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் தைவான் சீனாவுக்கு எதிரக திரும்பியிருக்கிறது.

இந்நிலையில், தற்போது கடல் வழியாகவும், வான் வழியாகவும் சீனா தைவானை சுற்றி வளைத்துள்ளது. அந்தப்பகுதியில் 2 நாட்களுக்கு சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. சினாவில் மேற்கு திசையில் இருக்கும் தைவானின் புதிய அதிபராக சில நாட்கள் முன்னர்தான் வில்லியம் ராய் பதவியேற்றார்.

அவர் தங்களை யாரும் அச்சுருத்த முடியாது என்று பேசியதையடுத்து, சீனா ராணுவம் இரண்டு நாள் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே சில உலக நாடுகள் ஒன்றுக்கொன்றுப் போரிட்டு கொண்டு வரும் நிலையில், தற்போது மேலும் இரு நாடுகள் போருக்குத் தயாராகியுள்ளது. அந்தவகையில், நவீன ஆயுதங்களுடன் தைவானை சுற்றி வளைத்துள்ளது சீன ராணுவம்.

இதுகுறித்து சீனா ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போது நடைபெற்று வரும் போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்குத் தண்டனையாக இருக்கும். தைவானின் அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் கோபமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான வார்னிங் ஆக இந்தப் போர் பயிற்சி அமையும்." என்றார். அந்நிய சக்தி என்று குறிப்பிட்டது அமெரிக்காவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஏனெனில், தைவானுக்கு முழு ஆதரவாக அமெரிக்காவே இருந்து வருகிறது. அகையால், சீனா அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Mexico: தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் பலி!

Advertisement