முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Cm Stalin | "நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?" - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!!

Why did not participate in Niti Aayog meeting?- Chief Minister Stalin's explanation!!
07:39 AM Jul 27, 2024 IST | Mari Thangam
Advertisement

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளித்துள்ளார்

Advertisement

அதில் "இந்நேரம் டெல்லியில் நடைபெறும் பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டிய நான், மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன்னால் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த திராவிட மாடல் அரசு கடந்த 3 ஆண்டுகாலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறதுனு உங்களுக்கு தெரியும். நம்ம அரசோட திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாக கிடைக்குது. அதுனாலதான் தி.மு.க.வுக்கு வெற்றி மேல வெற்றி குவியுது.

நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனதில் மகிழ்ச்சி இதுதான் அரசோட எண்ணம். இப்படிப்பட்ட நமது அரசோட எண்ணத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிற செயல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு அரசு எப்படி செயல்படனும் அப்படிங்குறதை நான் அடிக்கடி சொல்லிட்டு வர்றேன். ஒரு நல்ல அரசு வாக்களித்த மக்களுக்கு மட்டுமில்ல, வாக்களிக்க மறுத்த மக்களுக்கும் பாடுபடனும். இப்படித்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருது.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வர்றதுக்கு முன்னாடி இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும் அப்படித்தான் இருந்தது. ஆனா, இந்த பெருந்தன்மை ஒன்றிய பா.ஜ.க. அரசுகிட்ட இல்ல. இவங்க மட்டும்தான் அரசியல் நோக்கத்தோட அரசு நடத்துறாங்க. அதுக்கு அடையாளம்தான் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்ல மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க.வை பல மாநில மக்களும் புறக்கணித்தாங்க. அப்படி புறக்கணித்த மக்களை பழிவாங்கும் நடவடிக்கையாதான் நிதி அமைச்சர் தாக்கல் செஞ்ச ஒன்றிய பட்ஜெட் உள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிச்சுகிட்டே வர்றாங்க. தமிழ்நாட்டுக்குனு அவங்க அறிவிச்ச ஒரே திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை. அதுவும் 10 ஆண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில இருக்குனு உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டுக்குனு எந்த சிறப்புத் திட்டத்தையும் தராமல் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கும்னு எப்படித்தான் எதிர்பார்க்குறீங்க? 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைச்சுருக்காங்க. இந்திய மக்கள் பெரும்பான்மைய அளிக்கல. ஒரு சில மாநில கட்சிகள் ஆதரவு அளிக்கலன பா.ஜ.க.வால ஆட்சி அமைக்கவே முடியாது. பாஜக-விற்கு நாற்காலி கிடைக்க காரணமான மானிலங்களுக்கு மட்டும் நிதிய அள்ளி கொடுத்திருக்காங்க..

இப்படிப்பட்ட நிலைமையில பா.ஜ.க.வோட சறுக்கலுக்கு என்ன காரணம்னு உணர்ந்து பா.ஜ.க. திருந்திருக்கும்னு நினைச்சேன். பட்ஜெட்டுக்கு 2 நாள் முன்னாடிகூட தமிழ்நாட்டோட தேவை என்னனு பா.ஜ.க.வுக்கு தெரியப்படுத்துனேன். அதுல இருந்து ஒன்னு கூட நிதியமைச்சர் அறிவிக்கல. அவ்வளவு ஏன் தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டுல இல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
BJPBudget 2024cm stalinPM Modivedio
Advertisement
Next Article